Monthly Archives: March 2012

அபிராமி அந்தாதி, கணபதி காப்பு.

தார் அமர் கொன்றையும், சண்பக மாலையும்,சாத்தும் தில்லை
ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி, எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே,
கார் அமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே!
- அபிராமி அந்தாதி, கணபதி காப்பு.

சிவனார் மனம் குளிர 3

“ஓம்“ என்பதன் பொருள் ”ஓம்” தான்.
அதற்கும் மேலாக விளக்கம் கூறப் பலரும் முயனறுள்ளனர்.
”ஓம்” எனும் ப்ரணவ உண்மையின் பொருளே என விநாயகரை வர்ணிக்கின்றனர்.
இதுவும் விளக்கம் கூறும் முயற்சியே.

ஔவையார் வழிபட்ட விநாயகர் காரணமாக “விநாயகர் அகவல்” உருவானது.
அந்த அகவல் உண்மையில் ஒரு யோக சாதனம் அல்லது சாசனம என்றும் கூறலாம்.

”உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து”

இதனால் ஔவையார் ஒரு யோகினி என்பது புலனாகின்றது.

சிவனார் மனம் குளிர 2

ப்ரணவம் – ஓங்காரம் – ஓம்
ஓங்காரம் முழு முதல் என்பதிலும் தவறில்லை.
ஓஙகாரமாய் விளங்கும் நாதம்.
இந்த நாதப் ப்ரும்மத்திலிருந்தே இந்தப் பிரபஞ்சம் உருவானது.
இந்த நாதப்பிரம்மத்தைச் சிவனார் ஏன் கேட்டார்?
குமாரனார் ஏன் விளக்கினார்?
குமாரனார் பிரும்மத்தின் பொருளை விளக்கும் படி பிரம்மாவிடமே கேட்டார்.
சரியான முறையில் விளக்க முடியாது திணறிய ப்ரம்மாவின் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் குமரக் கடவுளாகிய முருகன்.
இது கதை.
ஓங்காரத்தின் உட் பொருளை அறிய விழையும் ஆவல்.

வேதாந்த சூத்திரத்திற்கு உரை எழுதியவர்கள் நால்வர்

வேதாந்த சூத்திரத்திற்கு உரை எழுதியவர்கள் நால்வர்
1.நீலகண்ட சிவாச்சாரியார் -  இவருடைய உரையைப் பின் பற்றுவோர – சைவர்கள்
2.சங்கராச்சாரியார்       – இவருடைய உரையைப் பின் பற்றுவோர – ஸ்மார்த்தர்கள்
3.இராமநுஜாச்சாரியார்       – இவருடைய உரையைப் பின் பற்றுவோர – வைஷ்ணவர்கள்
4.மத்வாச்சாரியார்       – இவருடைய உரையைப் பின் பற்றுவோர – மாத்துவர்கள்
சிவனை வழிபடுவோர சைவர்கள், ஏனைய மூவகையினரும் வைணவர்களே.
இவர்கள் துவைதம், அத்வைதம,விசிஷ்டாத்வைதம் எனவும் தனித்தனி கொள்கைகளை உடையவரகளாவர்.

சிவனார் மனம் குளிர

”சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா!”
இது திருப்புகழ்ப் பாடல் ஒனறன் முதல் வரி.
சிவனார்? என்றால், சிவன் ஆர்?
இதற்கு விடை, இதே திருப்புகழில் உள்ளது.
”சீவன் சிவச் சொரூபம் எனத் தேறி, நான் என்பதற்றுயிரோடூனென்பதற்று வெளி நாதப்பரப்பிரம்ம ஒளி மீதே.”
சிவன் – பரமசிவன்
சிவன் வேறு, சீவன் வேறு அல்ல.
அனைத்தும் ஒன்றே.
சிவனார் மனம் குளிர என்ன நடந்தது?
”சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குரு நாதா.”
சிவ பெருமானுடைய குரு, சிவ பெருமானுக்கு மந்த்ர உபதேசம் செய்கின்றார்.
சிவ பெருமானுக்கே குருவாக வருபவர் அவருடைய மகன் முருகன்.
என்ன மந்த்ரம் உபதேசிக்கப்படுகின்றது?