Monthly Archives: February 2012

அழகு 10

சந்திரனும், சூரியனும், ஆகாயமும் கூட அழகானவைகளே. மழை பெய்கின்றது. மழைத்துளி வீழ்வதை , அதன் அழகை ரசித்ததுண்டா?
சிறுவர், சிறுமியரைப் பாருங்கள். கை கொட்டிச் சிரித்து , ஆரவாரித்து அவற்றைக் கைகளில் ஏந்தி மகிழ்வார்கள். அந்த மகிழ்ச்சி கூட அழகுதான்.

அழகுக்கு அழகு என்பார்கள். ஆலயங்களில் விக்கிரகங்கள், சிலைகள், சிற்பங்கள் எனப் பலவற்றைக் காணலாம். அவற்றை உருவாக்கிய சிற்பாசாரியார்கள்
அவற்றைத் தமது உள்ளத்திலே உண்முகமாகக் கண்ட தோற்றங்களை அப்படியே  கற்களிலும், உலோகங்களிலும் உருவங்களாக வடிக்கின்றார்கள்.
அவற்றின் அழகில் ஏதும் குறையில்லை.

எனினும் அவற்றைத் துணிகளால் மூடிப் பல் வேறு ஆபலணங்களை அணிவித்து, மேலும் பல மலர் மாலைகளால் மூடி மறைத்து விடுகையில்
அவற்றின் உண்மையான அழகு காணாமற் போய் விடுகின்றது.  இப்படியாகச் செய்வதனால் யாருக்கு என்ன பயன்?

ஸ்வாமி விபுலானந்தருடைய பாடல் நினைவுக்கு வருகின்றது.

” வெள்ளை நிற மல்லிகையோ, வேறெந்த மா மலரோ, வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளை நிறப்புவுமல்ல, வேறெந்த மலருமல்ல, உள்ளக் கமலமடி உத்தமனார் வேணடுவது.”

அழகு 9

பார்த்துப் பார்த்துப் பழகி விட்டதனால் அழகாகத் தோன்றுபவைகளும் உள்ளன. திடீரெனக்கண்டவுடன் அழகாகத் தோற்றமளிப்பதும் உண்டு.

நீர் வீழ்ச்சிகள் தம் அழகால் அனைவரையும் கவர்கின்றன. கடலும, கடல் அலைகளும் நம்மைக் கவர்கின்றன.இயற்கையில் அழகைக் காண்பவனே உண்மையான ரசிகன்.

குறிப்பிட்ட பருவத்தில் அனைத்து உயிரினங்களுமே அழகுறக் காட்சி தருகின்றன. ஆண் மயிலுக்குத் தோகை வளர்ந்த பின் அழகு அதிகரிக்கின்றது.
காளை மாடுகள் தமது கொமபுகளும் திமிலும் போதிய அளவில் வளர்ந்ததும்அதிக அழகைப் பெறுகின்றன. கோழிச் சேவல்களைப் பாருங்கள்.
காகம் கூட அழகானது தானே.

அழகு 8

அழகான குழந்தை என்கின்றோம். எதனைக் கொண்டு அதனை அழகானது என்கின்றோம? நிறம் காரணமாகவா? கறுப்போ, வெள்ளையோ, சிவப்போ எப்படியாயினும் அழகுதான்.

ராமர், கிருஷ்ணர், வியாசர், திரௌபதை முதலியவர்களும் அழகுதான். அவர்களுடைய நிறமும் கறுப்புத்தான்.கிருஷ்ணா என்ற பெயர் ராமர் தவிர்ந்த ஏனையோருக்குப் பொதுவான பெயராகும்.

மலர்கள் அனைத்தும் அழகானவைகளே.எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.

அழகு 7

அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தியானது ஒரு தனித்துவமான தொழிலாக வளர்ந்து விட்டது.

உடலைத் துப்புரவு செய்வது,தோலை மிருதுவாக்குவது, தோல் நிறத்தை மாற்றுவது,தலை மயிரைப் பாதுகாப்பது, கூந்தல் வளர்ச்சி, கருமையாக்கல்,
கண் மை, புருவங்கள் தீடடல, உதட்டுச் சாயம், என்றவாறு பல வேறு வகை உற்பத்திகள்.

அழகு படுத்தும் நிலையங்கள் இரவு பகலாகப் பணியாற்றுகின்றன. இவைகளை அழகு சாதன வியாபாரத்தின் உச்சம் எனலாம்.

நகை அலங்காரம், தலையில் ஆரம்பித்து கால் விரல் வரை வகை வகையான அணிகலன்கள். போதாக் குறைக்கு வகை வகையான ஆடை அலங்காரங்கள் மற்றும் பாத அணிகள்.

பயமின்மை

பயமின்மை என்பது புகை வண்டி என்ஜினைப் போன்றது. அது நமது வாழ்க்கையை மேடு பள்ளங்களிலும் கூட, சரியான பாதையில் தடையின்றி இழுத்துச் செல்கின்றது.
இதில் “பரிவு“ கார்ட்டு வண்டியாகும். அது நம்மை விபத்திலிருந்து பாதகாக்கின்றது. இந்த இரண்டும் ஒருவரிடம் இருப்பது சிறந்த லட்சணமாகும், என்று நான் எனது கீதைப் பேருரைகளில் கூறியிருக்கிறேன்.
சாஸ்திரி அவர்களிடம் இந்த இரண்டு குணங்களும் காணப்பட்டன. அது தெய்வீக சம்பத்து ஆகும்.  – வினோபா பாவே (நன்றி,கல்கி 13-2-1966)

அழகு 6

சிலருடைய முகத்தில் ஒளியைக் காணவில்லை எனபார்கள். உள்ளே இருக்கும் “உள்ளொளி“ தான் முகத்தில் காணப்படும் ஒளியாகும். வேறெங்கிருந்தும் ஒளி வருவதிலலை.கண் ஒளி எனத் தோன்றுவதும் இதுவேயாகும்.அவர் முகத்தில் “தேஜஸ்“ ஒளிர்கிறது என்பார்கள். அதுவும் உள்ளொளியையே குறிப்பதாகும்.

பண்டைக் காலப் புலவர்கள், பாதாதி கேசம், கேசாதி பாதம், என வர்ணனை செய்வார்கள். உடல் உறுப்புக்களுக்கு உவமைகள் காட்டுவார்கள்.இது வெறுமனே புற அழகைப் போற்றுவதேயாகும்.

ஆணழகன் போட்டிகள் நிகழ்கின்றன. அவற்றில் வெறும் தசை அழகை மட்டுமே கணிக்கின்றார்கள். அழகு ராணிப் போட்டிகளும் இவ்வாறே நிகழ்கின்றன. இவற்றிலே பங்கு கொள்பவர்களும் வெற்றி பெறுபவர்களும் முதுமை அடைந்த பின்னர் அவர்கள் அழகு என்னவாகின்றது?

புற அழகைக் கொண்டு வெறமனே ஒருவரை மதிப்பீடு செய்வது இயலாததாகும்.

அழகு 5

உலகம் உள்ளது போலவே உள்ளது. உலகை நாம் நோக்கும் பார்வையிலேயே வேறுபாடு காணப்படுகின்றது. நல்லவர்க்கு எல்லாமே அழகு தான்.
அல்லாதவர்க்கு அனைத்துமே அழகற்றவைகளே.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எனபார்கள். உள்ளே இருக்கும் அழகே முகத்தில் ஒளியாக வீசும்.செயற்கை முறைகளால் எவ்வளவு தான் முகத்தை அழகு படுத்தினாலும் உள்ளே இல்லாத அழகு முகத்தில் தோன்றாது.

அகத்தை அழகு படுத்துவது எங்ஙனம்? நல்லவற்றை எண்ண்ல் வேண்டும். நல்லவற்றைச் செய்தல் வேண்டும்.நல்லெண்ணங்கள் கொண்டவர் முகம் “ஜகஜ்ஜோதியாக” ஒளி வீசும்.

அழகு 4

தருமரும், துரியோதனனும் காட்டு வழியே உலாவச் செல்கின்றனர். தர்மர் காண்பதெல்லாம் அழகாகத் தெரிவதாகவும், உலகம் மிகவும் அழகானது என்றும் கூறி அழகை ரசிக்கின்றார்.

துரியோதனனோ இதற்கு மாறாக அனைத்துமே அசிங்கமாக இருப்பதாகக் கூறி, உலகம் அழகாக இல்லை என மறுக்கிறான்.

அழகு 3

வயலில் விளைந்த கதிர்களைப் பசுமையாகக் காணும் பொழுது எவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றோம்.  கண் கொள்ளாக் காட்சியாக மனத்தைக் கவரும் அழகு.

பறவைகள், மிருகங்கள், மற்றும் பல் வேறு உயிரினங்கள் தம் அழகால் எம் மனதைக் கவர்கின்றன. கொடிய மிருகங்கள் கூடத் தம் அழகால் எம்மை மயக்கும். அழகு என்பது அவரவர் பார்வையால் அமைகின்றது.

அழகு 2

முருகன் மட்டும் தான் அழகா?

இந்தக் கேள்விக்கும் பதில் உள்ளது. முருகன் என்ற சொல்லே மிகவும் அழகாக உள்ளது. முருகு – அழகு, முருகன் – அழகன்.

முருகனுடைய தாயார் பச்சை நிறமாகக் காட்சி தருகினறார். இவரைப் பச்சையம்மன் என்றும் அழைக்கின்றார்கள். மதுரை மீனாட்சி அம்மன் பச்சை  நிறமாகவே காட்சி தருகின்றார். பச்சை – பசுமை, கண்களுக்குக்  குளிர்மை.

கோடை கால வெப்பத்தைத் தாங்க முடியாது. பசுமை நிறைந்த மர நிழலில் வெப்பம் தெரிவதில்லை.