Monthly Archives: January 2012

அழகு

அழகு எது? அழகு என்றால் என்ன? அழகு என்று சொன்னவுடன் இது போன்ற கேள்விகள் எழுவது இயற்கையே. இயற்கை என்றவுடன், இயற்கை அழகு நினைவுக்கு வருகின்றது. இயற்கையே அழகுதான். இயற்கையான அழகு இருக்கக்கூடியதாகச் செயற்கையான அழகை நாட வேண்டிய தேவையே இல்லையே. இயற்கை அழகை ரசிக்கும் பொழுது இது போன்ற வேறு அழகும் உண்டா என்ற நினைவு வரும். காடு, மலை, ஆறு, கடல், ஆகாயம், முகில், வானவில், மழை, என்றிவ்வாறு அனைத்துமே அழகு தானே. முருகன் அல்லது அழகு என்ற பெயரில் பெரியார் திரு வி. க. அவர்கள் எழுதிஉள்ள நூலை வாசியுங்கள். இலகுவான, எளிமை நிறைந்த தமிழ். திரு.வி.கல்யாண சுந்தர முதலியார் அவர்களைத , திரு. மு.வரதராசனார் தம து குருவாகக் கொண்டிருந்தார். திரு.வி.க. அவர்களுடைய நூலிலே அவர் முருகனை அழகனாக இயற்கையிலே காண்கின்றார். பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்த பரிபூரணஆனந்தமே.என்று கூறுவது போலவே, இயற்கையே முருகனாகவும், முருகனே இயற்கையாகவும் அவர் காண்கின்றார். (தொடரும்)