Category Archives: சமயம்

நெற்றிக்கண்

நெற்றிக்கண்
சிவ பெருமானுக்கு நெற்றிக்கண் உள்ளது என்கின்றோம்.
ஓவியங்களில சிவபெருமானுக்கு மூன்று கண்கள் தீட்டப் பட்டிருப்பதைக் காண்கின்றோம்.
நெற்றிக்கண்ணைப்பற்றி விஞ்ஞான அடிப்படையில ஆராய்ந்தவர்கள் சில அடிப்படை உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.
இரண்டு கண் புருவங்களுக்குமிடையே நெற்றிக்கண் இருப்பதாக நாங்கள் இது வரை நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
உண்மையில் அங்கே கண் எதுவும் கிடையாது.
அப்படியானால் நெற்றிக்கண் என்பது பொய்யா?
அது கண் வடிவமாக இல்லை.
அது ஒரு சுரப்பியாக உள்ளது.
அந்தச் சுரப்பியின் சக்தி சொல்லி முடியாதது.
நமது உடலிலுள்ள அனைத்துச் சுரப்பிகளையும் அது கட்டுப்படுத்துகின்றது.
நெடுங்காலமாக அதன் பயன்களை யாருமே அறியாதிருந்தனர்.
அது பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள வல்லது.
மனிதனுடைய ஆத்மீகத்திற்கு அடிப்படையாக விளங்குகின்றது.

சீவன்-சிவம்

சீவன்-சிவம்
சீவன்-சிவன் என்பது பிழை.
“சீவன்,சிவச் சொரூபம் எனத் தேறி“ -திருப்புகழ் பாடல் வரி
சிவச் சொரூபம் நமக்குள்ளே இருக்கின்றது.
மூளையின் அடியிலே முள்ளந் தண்டு பொருந்தும் இடத்திலே ஒரு சுரப்பி உள்ளது.
இது கிட்டத் தட்ட ஒரு குகையின் வடிவிலே அமைந்துள்ளது.
இந்தக் குகைக்குள்ளே மற்றுமொரு சிறிய சுரப்பி உள்ளது.
இது பார்ப்பதற்கு சிவ லிங்கம் போலவே தோற்றமளிக்கும்.
சைவசமய ஞானிகள் சிவ பதம் அடைந்த பின்னர் அவர்களுடைய உடம்பை எரிக்காமல் புதை குழி தோண்டி அதற்குள் உடலை வைத்து திருநீற்றால் மூடி சமாதி கட்டுவார்கள்.
இப்படியான சமாதி ஒன்றை இட மாற்றம் செய்ய நேர்ந்த பொழுது அந்தச் சமாதியைத் திறந்த பொழுது இந்தச்சிவ லிங்கம் மட்டுமே அதனுள் காணப்பட்டது.
இந்தச் சுரப்பி இலகுவில் அழியாதது.ஆத்மீகத் தொடர்புகளுக்கு முக்கிய காரணமானது.
இதுவே மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக் கண்ணுமாகும்.
இது எது வித முயற்சியுமில்லாமல் குண்டலினியை எழுப்ப வல்லது.

கடவுள் உருவாக்கிய மதம்

கடவுள் உருவாக்கிய மதம் என்கின்றார்கள். கடவுள் ஏன் மதத்தை உருவாக்க வேண்டும்? கடவுளையே மனிதர்கள் தாம் உருவாக்கினார்கள்.
பிறகு அவர் பெயரால் மதங்களையும் உருவாக்கினார்கள்.இப்பொழுது மத வெறி பிடித்து அலைகின்றார்கள்.கடவுளை விட்டு விட்டார்கள்.
கடவுளுக்கு மதம் கிடையாது.யானைக்குத்தான் மதம் பிடித்தால் கண்ணில கண்டதை எல்லாம் அழித்தொழிக்கும்.

வேதாந்த சூத்திரத்திற்கு உரை எழுதியவர்கள் நால்வர்

வேதாந்த சூத்திரத்திற்கு உரை எழுதியவர்கள் நால்வர்
1.நீலகண்ட சிவாச்சாரியார் -  இவருடைய உரையைப் பின் பற்றுவோர – சைவர்கள்
2.சங்கராச்சாரியார்       – இவருடைய உரையைப் பின் பற்றுவோர – ஸ்மார்த்தர்கள்
3.இராமநுஜாச்சாரியார்       – இவருடைய உரையைப் பின் பற்றுவோர – வைஷ்ணவர்கள்
4.மத்வாச்சாரியார்       – இவருடைய உரையைப் பின் பற்றுவோர – மாத்துவர்கள்
சிவனை வழிபடுவோர சைவர்கள், ஏனைய மூவகையினரும் வைணவர்களே.
இவர்கள் துவைதம், அத்வைதம,விசிஷ்டாத்வைதம் எனவும் தனித்தனி கொள்கைகளை உடையவரகளாவர்.