மூச்சு உள்ளே வந்து வெளியே போகின்றது.
இதை நன்கு அவதானிக்க வேண்டும்.
மூச்சு உள்ளே வந்து வெளியே போவதற்கிடையில் ஓர் இடைவெளி இருக்கின்றது.
இதே போல வெளியே போன மூச்சு மீண்டும் உள்ளே வருவதற்கிடையிலும் ஓர் இடைவெளி இருக்கினறது.
இந்த இடைவெளியில் மூச்சு நின்று விடுகின்றது.
இதனாலேயே நாம் ஒவ்வொரு கணமும் இறந்து பிறக்கின்றோம் என்று கூறப்படுகின்றது.
Category Archives: Spiritual
விஞ்ஞான பைரவ தந்த்ரம்
“விஞ்ஞான பைரவ தந்த்ரம்“, பண்டைக்கால சாக்த மதத்திற்குரிய தந்திர விளக்கப் புத்தகங்களுள் ஓன்றாகும்.
சாக்தம் என்பது சக்தி வழிபாட்டைக் குறிக்கம் பெயராகும்.
அந்த வழிபாட்டிலும் கூட வாமாச்சாரம், தக்ஷணாச்சாரம என இரு பிரிவுகள் உள்ளன.
ஆதி சங்கராச்சர்யார் காட்டிய வழி முறையே தக்ஷணாச்சாராமாக மிளிர்கின்றது.
வாமாச்சாரம் தவறான வழி முறைகளில் செல்ல முயன்றதனாலேயே அவரால் ஒதுக்கப்பட்டது.
இந்தப் புத்தகம் ஓஷோவினாலும்,மற்றும் ரங்கநாத ராவ் என்பவராலு்ம் ஆங்கில மொழியில விளக்கமாகக் கூறப்படுகின்றது.
இவர்கள் இருவருக்கும் நாங்கள் அனைவரும் நன்றி கூறக் கடமைப் பட்டவர்களாவோம்.
வீரத்தின் விளை நிலம்
மூலாதாரச் சுரப்பி, மற்றும் ஆக்ஞா சக்கரச் சுரப்பி,அதன் மேலே அதனைப் பாதுகாக்கும் குகை போன்ற அமைப்பிலான சுரப்பி என்பவற்றோடு
நமது மார்பின் மத்தியிலே அமைந்திருக்கும் மற்றுமொரு சுரப்பியையும் கண்டு கொள்வோம்.
இந்தச் சுரப்பியை உசுப்ப வல்ல சக்தி தாய்ப் பாலுக்கு மட்டுமே உண்டு.
குழந்தையாக இருக்கும் பொழுது தாய்ப் பால் அருந்தாதவர்களுக்கு இந்தச் சுரப்பி வேலை செய்வதில்லை.
வீரம் பேசுபவர்கள் அடிக்கடி தம் மார்பைத் தட்டுவதை அவதானித்திருப்பீர்கள.
இந்த வகையிலும் இந்தச் சுரப்பி உசுப்பப் படுகின்றது.
இது தான் வீரத்தின் விளை நிலம் என்றும் கூறலாம்.
இவ்வாறான சுரப்பிகள் அனைத்துமே பெரும்பாலும் நாளமில்லாச் சுரப்பிகளே.
இவைகள் இரத்த நாளங்களுடன் தொடர்பற்றவைகளாயினும் எமது முள்ளந் தண்டுடன் எவ்வாறோ இணைப்புக் கொண்டுள்ளன.
உள்ளே பார், ஒளி தெரியும.
உள்ளே பார், ஒளி தெரியும.
உள்ளே பார்த்தேன், ஒன்றுமே தெரியவில்லை.
அப்படியா, ஒரு விளக்கைக் கொளுத்தி வைத்து அதனுடைய ஒரு சுடரை வைத்த விழி வாங்காமல பார்த்துக் கொண்டிரு.
சிறிது நேரத்தின் பின் கண்களை மூடு, இப்பொழுது இரண்டு கண்களுக்கும் நடுவே சுடர் தோன்றும்.
இவ்வாறு தினமும் தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டு வா.கால கதியில் சுடர் தானாகவே உனக்கு முன்பாகத் தோன்றும்.
தியானம்
தியானம் செய்
இதைத்தான் எல்லோரும் சொல்கின்றனர்.
தியானம் என்றால் என்ன என்றே தெரியாதவர் எவ்வாறு தியானம் செய்யலாம்?
60க்கும் மேற்பட்ட தியான வகைகள் உள்ளன. எதைச் செய்வது?
மிக மிக இலகுவான வழி நாம ஜபம்.
இல்லை நான் தியானம் தான் செய்வேன் என்பவர்களுக்கு இது ஒரு வழி.
உள்ளுக்குள்ளே பார் என்கின்றார்கள்.உனக்குள்ளே பார் என்கின்றார்கள்.
உள்ளுக்குள்ளே எதைப்பார்ப்பது, எங்கே பார்ப்பது?
லலாடத்தானம் – நெற்றி
ஆக்ஞா சக்கரம்
புருவ மத்தி
இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு புருவமத்தியின் உட்புறமாகப் பார்வையைச் செலுத்த வேண்டும்.வேறெதையும் யோசிக்கக் கூடாது.
இந்தப் பார்வையானது இங்கே பட்டுத் தெறித்து மேலும் உள்ளே போகும். அது நேராகக் குகைச் சுரப்பிக்குள்ளே இருக்கும் மிகச் சிறிய
சுரப்பியைத் தாக்கும்.ஒரு முறை இந்தச் சுரப்பியை உசுப்பி விட்டால், நீங்கள் மறந்தாலும் அது உங்களை விடாது மீணடும்,மீண்டும் உங்களை அழைத்தபடியே இருக்கும்.
ஏழாவது ஆதாரமா
ஆறாதாரங்கள் கண்டோம்
சிலர் உச்சியை ஏழாவது என்கின்றார்கள்.
ஏழாவது ஆதாரமோ சக்கரமோ அல்ல அது ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை ஆகும்.
இதற்கு மேல் தோன்றவும்,நெற்றியின் ஊடாக வெளியே வரவும் கூடிய மனோண்மணி இரண்டிற்கும் நடுவே அமைந்துள்ளது.
நெற்றியின் உள்ளே சுரப்பியோ கண்ணோ கிடையாது.
நெற்றிக்குக் கீழே புருவ மத்திக்கு நேராக,மூளையின் அடியிலே முள்ளந் தண்டு சந்திக்கும் இடத்தின் முன் புறமாக, ஒரு குகை போன்ற அமைப்பில ஒரு சுரப்பி காணப்படுகின்றது.
இந்தச் சுரப்பிக்கு உள்ளே மற்றுமொரு சுரப்பி, உங்கள் கைச்சின்ன விரலின் நுனி அளவேயானது இருக்கின்றது.
ஐந்தாம் ஆறாம் ஆதாரங்கள்
ஐந்தாம் ஆதாரம்
தானம் – கண்டம் (கழுத்து)
ஆசனம் – பதினாறு இதழ்கள் கொண்ட கமலம் (தாமரை) அறுகோணம்
மந்த்ரம்
தேவதை-மஹேஷ்வரி
நிறம் – மேக நிறம்
தெய்வம் -மஹேஸ்வரன்
சக்தி அக்ஷரம் – “வ“காரம்
ஆறாம் ஆதாரம்
தானம் – லலாடம் (நெற்றி – நெற்றிப் பொட்டு)
ஆசனம் – மூன்று இதழ்கள் கொண்ட கமலம் – முக்கண்அடையாளமா? – வட்டம்
மந்த்ரம்
தேவதை – மனோண்மணி – அம்மனுக்கும் பெயர் -
நிறம் – ஸ்படிக நிறம்
தெய்வம் – சதா சிவம்
சக்தி அக்ஷரம் – “ய“ காரம்
உண்மையாகவே மனத்தினுள் போய் வெளியே வரும் நீல நிற மணி (ரத்தினக்கல உண்டு)
மூன்றாம் நான்காம் ஆதாரங்கள்
மணி புரகம்
தானம் -
நாபிக்கமலம்
ஆசனம் -
மூன்றாம் பிறை
பத்து இதழ்கள் கொண்ட கமலம்
மந்த்ரம்
தேவதை – லக்ஷமி
நிறம் -
மரகதம்
தெய்வம் -
மஹா விஷ்ணு
சக்தி அக்ஷரம் -
“ம“ – மகாரம்
அனாகதம்
தானம் -
ஹ்ருதய கமலம்
ஆசனம் -
பன்னிரண்டு இதழ்கள் கொண்ட கமலம்
மந்த்ரம் -
(மேல் நோக்கிய) முக்கோணம்
தேவதை -
பார்வதி
நிறம் -
ஸ்படிக நிறம்
தெய்வம் -
ருத்ரன்
சக்தி அக்ஷரம் -
“சி“ சிகாரம்
இரண்டாம் ஆதார சக்கரம்
சுவாதிஷ்டானம்.
தானம் – கோசத்திற்கும் நாபிக்கும் இடைப்பட்டது, நாற் சதுரம்
ஆசனம் – ஆறு இதழ்கள் கொண்ட கமலம்- தாமரை
தேவதை – சரஸ்வதி
நிறம் – செம்பொன் நிறம்
தெய்வம் – பிரம்மா
சக்தி அக்ஷரம் – “ந“காரம் – “ந“
மூலாதாரம்
மூலாதாரம்
தானம்-ஸ்தானம்-நிலையம்-
குதத்திற்கும்,கோசத்திற்கும் இடைப்பட்டது.
ஆசனம்-
நாலிதழ்க் கமலம் – நான்கே இதழ்களைக் கொ்ண்ட தாமரை
மந்த்ரம்-
ஓம் – ஓங்காரம்
தேவதை-நிறம்
கணபதி
மாணிக்க நிறம்
தெய்வம்-
குண்டலினி சக்தி
சக்தி அக்ஷரம்-
ஓங்காரம்
\/
மூலாதார சக்கரம் முக்கோண வடிவமானது.
அறிவியலாளர் ஆயவுகளின் பிரகாரம் இதுவும் ஒரு சுரப்பிதான்.
இது தினமும் அதி காலையில் ஒரு குண்டூசி நுனியின் அளவு துளி சக்தியை நமது உடலிற் சேர்க்கின்றது.